?நேரலை 12-09-2021 | தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம்
Click Here to Add Your Business
அறிவிப்பு: செப்.12, சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – சென்னை (போரூர்) | நாம் தமிழர் கட்சி
உலகத்தின் மிகமூத்தக் குடியான தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவ அடையாளங்களை இல்லாதொழித்து, அதன் உண்மை வரலாற்றுக்குப் புறம்பாகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்தை அடையாளமழிப்பு செய்கின்ற முயற்சிகள் வரலாறு முழுக்க நடந்து வருகின்றன. மொழி, கலை, இலக்கிய, இலக்கண, பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக ஓர் இனம் கண்டடைந்த முதுபெரும் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய திசைதிருப்பல்களையும், ஒரு தேசிய இனத்தின் இறையாண்மையை, வரலாற்றுப் புரட்டுகள் மூலம் இல்லாமல் போகச்செய்யும் திரிபுவாதங்களையும் எடுத்த எடுப்பிலேயே முறியடிக்க வேண்டியது, உணர்வும் அறிவும் ஒருங்கே பெற்ற தமிழர்களது கடமையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.
சங்ககாலம் தொட்டுத் தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் மக்கள் வரலாற்றில் யாராக அடையாளப்பட்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டிட, எதிர்காலத் தலைமுறைக்கு ஆவணப்படுத்திட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் "சங்க காலம் தொட்டு.. தமிழரா.. திராவிடரா..?" என்ற தலைப்பில் மாபெரும் இன விடுதலை அரசியல் கருத்தரங்கத்தினை வருகின்ற 12-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10 மணி முதல் முழு நாள் நிகழ்வாக, சென்னை போரூர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையத்தில் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் கருத்தரங்க நிகழ்வினை, செம்மை மரபுப் பள்ளியின் நிறுவனர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் தொடங்கி வைத்து, ‘சங்க காலத் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் இறைப் பேருரை நிகழ்த்த உள்ளார். இந்தக் கருத்தரங்கின் காலை அமர்வில் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மாலை அமர்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பேரறிஞர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களும், மாபெரும் ஆய்வறிஞ…
ஆகச் சிறந்த கருத்தரங்கம்.மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாம் தமிழர் கட்சி பல கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.நாம் தமிழர்
திராவிடம் இனி மெல்ல சாகும் ?
தமிழ் இனி தலை ஓங்கும்… நல்லவை எண்ணுவோம் நல்லதை நிகழ்த்துவோம்
அண்ணன் களஞ்சியம் அவர்களின் பேச்சு மிக அருமையாக உள்ளது ??. நாம் தமிழர்???
நாங்கள் தமிழராகவே இருந்துவிட்டுப் போகிறோம் எங்களுக்கு திராவிடர் என்ற சாயம் பூச வேண்டாம்..நாம் தமிழர். தமிழர்களாக ஒன்றாவோம்..
இனிமேல் ஒரு கருனா இனிமேல் ஒரு வகையான சுந்தரம் ஒரு ராஜீவ் காந்தி இந்த கட்சியில் பிறக்கவே கூடாது என்று ஆண்டவனை பார்த்து எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
நிச்சயமாக அது போன்ற
போலிகள் இருக்க கூடாது
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.
நல்ல தெளிவான பேச்சுக்கள்.
ஆசான் ஆற்றிய உரை அருமையானது….எளியோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது…ஆசானின் ஆலோசனைகள் கட்சிக்கும் மக்களுக்கும் இன்றியமையாதது ….
1 மணிநேரம் பேசக்கூட திராவிடத்திடம் செய்தி இல்லை…. ஆயுள் முழுக்க பேசினாலும் தீராத செய்திகள் தமிழில் உள்ளது..
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.
ஆசான் செந்தமிழன் ஐயா ஆற்றிய உரை மிக மிக அருமை ?? இதுவரை கேட்காத உரை மற்றும் தெளிவான கருத்துக்கள்
Senthamiznan video athunaiyum arivukalangiyame…..must watch all
@rajalakshmi periasamy இணைப்பு இருந்தால் அனுப்புங்கள் ?
unmai ????
ஒவ்வொருவரின் பேச்சை தனி தனி விடியோவாக போடுங்க
இது நேரலை,,, அடுத்து ஒவ்வொருவராக பேசியது வரும்
ஆசான் ஆசான் தான்.. செந்தமிழன் ஆற்றியது உறையல்ல உணர்வியல்
உறுதியாக வெல்வோம். நாமே தமிழர்.
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம் ❤️?
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி ?
தமிழர்களே நாம் அகதி ஆகாது வாழ நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் ?
வரலாற்றில் இடம்பெறப்போகும் ஆகச்சிறந்த கருத்தரங்கம். வாழ்க தமிழ் வெல்க தமிழினம் ♥️
மிகச்சிறந்த கருத்தரங்கம்.
தமிழ் தேசியத்தின் பிள்ளைகளாக ஒன்று கூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆசான் செந்தமிழன் இறையின் புதல்வன் தாய் கொற்கையின் புதல்வன் செம்பிய எழுகைக்கு முதற்கண்…
ஆய்வு முற்றுபெறாத சோதனை தடுப்பூசிகளை மக்களிடம் திணிப்பதை அரசுகளும் ஊடகங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.